கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்: EPS

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 12, 2020, 12:40 PM IST
    • மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி.
    • 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது.
    • ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்: EPS title=

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவுமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் நீரை திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்.... கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்; வெளியில் சென்றுவிட்டு திரும்பினால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சென்னையில் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் லாக்டவுன் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானவை. என்னுடைய பெயரில் அப்படி செய்திகளை வெளியிட்டவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதால்தான் கொரோனா தொற்று அதிகமாக ஏற்படுகிறது. பொதுமக்கள் தேவையே இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேன்டும். ஊடகத்தின் வாயிலாக தினந்தோறும் விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களைத் தெரிவித்து வருகிறோம். ஆனால், மக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். நான் வரும்போது பலரையும் பார்க்கிறேன். யாருமே முகக்கவசம் அணியவில்லை. விழிப்புணர்வுப் படம் எடுத்து வெளியிட்டோம். அதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். பொதுமக்களுக்குக் குறிப்பாக சென்னை மக்களுக்குக் கோரிக்கை வைக்கிறோம். அரசு அறிவிக்கின்ற நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.

READ | ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1.6 லட்சம் வட்டியில்லா கடன்; மத்திய அரசு திட்டம்!

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. நோய் யாருக்கும் வரும் என்றே தெரியவில்லை. அனைவருக்கும் வந்துள்ளது. பிரிட்டன் பிரதமருக்கே வந்தது. நமது சட்டப்பேரவை உறுப்பினரே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது'' என அவர் குறிப்பிட்டார். 

Trending News