இன்று காலை திருப்பதி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, 2014 பொதுத்தேர்தலில் திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து. ஆனால் இதுவரை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்தை மோடி அரசு வழங்கவில்லை. ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்கள் வெறும் பொய்யான வாக்குறுதி மட்டும் தான் கொடுப்பார்கள்.
ஆனால் ஆந்திரா மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கப்போகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அதை யாராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இது உறுதி என ராகுல்காந்தி பேசினார்.
You do not have to worry about Special Status for AP, it is our commitment. Today I visited the most holy shrine in the state. It was an honour for me to be given the love and affection by the people of Andhra : Congress President @RahulGandhi #PratyekaHodaBharosaYatra
— Congress (@INCIndia) February 22, 2019