மக்களவை தேர்தல் 2019: தங்கள் வாக்கை பதிவு செய்த நாகசைதன்யா மற்றும் சமந்தா

ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இன்று முதல் கட்ட தேர்தல் தேர்தல் நடக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 11, 2019, 03:44 PM IST
மக்களவை தேர்தல் 2019: தங்கள் வாக்கை பதிவு செய்த நாகசைதன்யா மற்றும் சமந்தா title=

13:25 11-04-2019
நடிகர் நாக சைதன்யா மற்றும் அவரின் மனைவி நடிகை சமந்தா இருவரும் வாக்களிக்க நாகராம்குடா வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு செய்தனர். 

 

 


11:30 11-04-2019
தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தில், வாக்கு இயந்திரத்தில் சில கோளாறு ஏற்ப்பட்டதால், வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை. வாக்கு இயந்திரம் சரிசெய்யும் வரை வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. சரிசெய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். ஆனால் பல வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மீண்டும் வர மாட்டார்கள். எனவே வாக்கு இயந்திரம் கோளாறு ஆனா அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மீண்டும் வாக்கு பதிவு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 


11:21 11-04-2019
அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனுவால் திப்ருகார்ட் வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

 

 


10:32 11-04-2019
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு சாவடி எண் 220ல் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது வாக்கை செலுத்தினார்.

 


10:17 11-04-2019
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பன்டிபோரா வாக்குச் சாவடி எண் 114 மற்றும் 115-ல் வாக்களிக்க மக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.

 


10:12 11-04-2019
காலை 9 மணியளவில் தெலுங்கானாவில் 10.6%, அந்தமான் நிகோபார் தீவுகளில் 5.83%, அசாமில் 10.2%, அருணாச்சல பிரதேசத்தில் 13.3% வாக்கு பதிவாகி உள்ளது

 

 


09:50 11-04-2019
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு (ஈ.வி.எம்.) இயந்திரத்தை ஜனசேனா எம்.எல்.ஏ. வேட்பாளர் மதுசூதன் குப்தா கீழே தூக்கி போட்டி உடைத்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுக்குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


09:44 11-04-2019
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கே. கவிதா தான் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதியான நிஜாமாபாதில் தனது வாக்கை செலுத்தினார்.

 

 


09:34 11-04-2019
உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தனது வாக்கை டெஹ்ராடூன் உள்ள டிபன்ஷ் காலனியில் அமைத்துள்ள 124வது வாக்குச் சாவடி செலுத்தினார்.

 

 


09:33 11-04-2019
நாகலாந்து நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி வரை 21% வாக்குப்பதிவாகி உள்ளது.

 


நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11) முதல் தொடங்கி அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், காஷ்மீர், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 20 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 

 

20 மாநிலங்களிலும் உள்ள 91 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தொகுதிகளிலும், பிரசாரம் நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதி நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

Trending News