மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிப்பு!!
டெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் உத்தரவின்படி, முதல்வர் கமல்நாத் சட்டசபையில் இன்று (மார்ச் 16) நம்பிக்கை ஓட்டு கோர இருந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் என அறிவிக்கபட்டிருந்தது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 அதிருப்தி MLA-கள் காங்கிரசில் இருந்து விலகினர். இதனால் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சுமார், 6 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் லால்ஜி டாண்டன், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு கமல்நாத்திற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமது கட்சி MLA-களுடன் ஆலோசனை நடத்திய முதல் அமைச்சர் கமல்நாத் நள்ளிரவில் ஆளுநரை சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை BJP-யினர் பெங்களூரில் சிறைவைத்துள்ள நிலையில் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க இயலும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். MLA-கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரியதாக தெரிவித்த கமல்நாத் அரசியல் சாசனத்தை மதிப்பளிக்குமாறும் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Madhya Pradesh Assembly adjourned till 26th March https://t.co/vPqkvM9QHi
— ANI (@ANI) March 16, 2020
இதனிடையே டெல்லி அடுத்த குருகிராமில் ITC கிராண்ட் பாரத் என்ற சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த மத்தியப் பிரதேச பாஜக MLA-கள் போபாலுக்கு செல்ல டெல்லி விமான நிலையத்திற்கு சொகுசுப் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். விமான நிலையத்தில் அரசியல் நிலவரம் குறித்து MLA-கள் விவாதித்தனர்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டபோதும், இதுகுறித்த தமது முடிவை இன்று அறிவிப்பதாக சபாநாயகர் பிரஜாபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கும் நிலையில், அது மத்திய பிரதேச சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. கொரோனாவால் கமல்நாத் அரசுக்கு தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கிடைத்துள்ளது.