பாலம் உடைந்து விபத்து :பேருந்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

Last Updated : Aug 11, 2016, 01:15 PM IST
பாலம் உடைந்து விபத்து :பேருந்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு title=

மராட்டியம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில் ராய்காட் மாவட்டம் மகாடு பகுதியில் சாவித்திரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாலம், சமீபத்தில் வெள்ளப்பெருக்கில் இடிந்து விழுந்தது. மேலும், அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு அரசு பஸ்களும், சில தனியார் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினரும் பஸ்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. இந்த மீட்பு பணி கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.  

இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்படுள்ளன. இந்த நிலையில், அடித்துச்செல்லப்பட்ட இரண்டு பேருந்துகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த நீர்மூழ்கி வீரர் பேருந்தின் பாகங்களை கண்டெடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

 

Trending News