மீண்டும் தள்ளிபோனது உத்தவ் அமைச்சரவை விரிவாக்கம்...

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையின் விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 24, 2019, 12:32 PM IST
  • முதல்வர் உத்தவ் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை சிவசேனா மற்றும் என்.சி.பி ஏற்கனவே தயார் செய்துள்ளதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.
  • இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தனது உறுப்பினர்களின் பட்டியலை தயார் செய்யாத நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவையின் விரிவாக்கம் தற்போது டிசம்பர் 30 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தள்ளிபோனது உத்தவ் அமைச்சரவை விரிவாக்கம்... title=

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையின் விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அமைந்துள்ள அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை விரிவாக்கத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் காங்கிரஸ் உயர் கட்டளை அதன் எம்.எல்.ஏ.க்களின் பெயரை இன்னும் இறுதி செய்யாததால் அமைச்சரவை விரிவாக்க முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முதல்வர் உத்தவ் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை சிவசேனா மற்றும் என்.சி.பி ஏற்கனவே தயார் செய்துள்ளதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தனது உறுப்பினர்களின் பட்டியலை தயார் செய்யாத நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவையின் விரிவாக்கம் தற்போது டிசம்பர் 30 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பவார், ஜிதேந்திர அவாத், த்ரம்ராவ் பாபா அட்ரம், நவாப் மாலிக், தனஞ்சய் முண்டே, பாரத் பால்கே மற்றும் ஹசன் முஷ்ரிப் ஆகியோர் NCP ஒதுக்கீட்டில் இருந்து அமைச்சரவை அமைச்சராக பதவியேற்க உள்ளனர், சிவசேனா எம்எல்ஏக்கள் ராம்தாஸ் கதம், அனிம் பராப், நீலம் பராப் வைகர், சுனில் பிரபு, அப்துல் சத்தார், பாஸ்கர் ஜாதவ், தீபக் கேசர்கர் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அசோக் சவான், பிருத்விராஜ் சவான், விஜய் வெட்டிவார், வர்ஷா கெய்க்வாட், யஷோமதி தாக்கூர், சுனில் கேதார், சதேஜ் பாட்டீல், அமித் தேஷ்முக், கே சி பட்வி மற்றும் விஸ்வஜீத் கதம் ஆகியோரை மகாராஷ்டிராவில் அமைச்சரவை அமைச்சர்களாக மாற்ற காங்கிரஸ் உயர் கட்டளை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நவம்பர் 28-ஆம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். அதேநாளில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய், என்.சி.பியின் ஜெயந்த் பாட்டீல் மற்றும் சாகன் புஜ்பால், மற்றும் காங்கிரஸின் பாலாசாகேப் தோரத் மற்றும் நிதின் ரவுத் ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். எனினும் உத்தவ் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் இதுநாள் வரை தள்ளி சென்றுக்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News