பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மேலும் பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இறைச்சிகாக மாடுகள் உட்பட சில கால்நடைகள் விற்கக் கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அதோடு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.