மம்தா பானர்ஜி சிபிஐ-க்கு எதிராக தனது தர்ணா போராட்டத்தை தொடரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நடைபெறுகிறது.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.
இதையடுத்து கமிஷனர் வீட்டுக்கு விரைந்த மம்தா பானர்ஜி, அங்கு மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளார், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் எங்களால் என்று கூறினார்.
பின்னர், மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா விவகாரம் தொடர்பாக சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்டில் சிபிஐ தொடர்ந்த இவ்வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தாவும் தனது தர்ணா போராட்டத்தை மூன்றாவது நாளாக தொடர்கிறார்.
West Bengal: Actress and TMC's Indrani Halder meets Chief Minister Mamata Banerjee at 'Save the Constitution' dharna in Kolkata. The CM has been on the dharna since the night of February 3. pic.twitter.com/ZTdoUwy50T
— ANI (@ANI) February 5, 2019
நேற்றிரவு அம்மாநில ஆளுநர் கே.என்.திரிபாதி, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.