தனக்கு கொரோனா தாக்கியதாக கருதி தற்கொலை செய்துகொண்ட நபர்

தனக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக கருதிக்கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 54 வயதான நபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Feb 12, 2020, 03:58 PM IST
தனக்கு கொரோனா தாக்கியதாக கருதி தற்கொலை செய்துகொண்ட நபர் title=

தனக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக கருதிக்கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 54 வயதான நபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1,110 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 

உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமெரிக்கா பெண் (வயது 60) ஒருவரும், உகான் நகர மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஜப்பானை சேர்ந்த (வயது 60) ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் 39 வயது நிறைந்த ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகினர்.

இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். 

கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சீனாவில் கூடுதலாக 103 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்வடைந்தது.

இந்நிலையில் தற்போது ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணையா மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக சில நாட்கள் முனபு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இதயம் பலவீனமாக இருப்பதாகவும் வெளியிடங்களுக்கு செல்லும்போது தூசுகளை தவிர்க்க மாஸ்க் அணியும் படியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கருதிக்கொண்டுள்ளார் பாலகிருஷ்ணையா.

இந்நிலையில் ஊர் மக்களுக்கு தமது வைரஸ் பாதிப்பு பரவிவிடும் என்று ஆழமான எண்ணியவர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News