RAW மற்றும் IP அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் மோடி உத்தரவு

மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு, ரா அமைப்புக்கு சுமந்த்குமார் கோயல் மற்றும் புலனாய்வு பிரிவு (ஐபி) அமைப்புக்கு அரவிந்த்குமார்  ஆகியோரை நியமித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 26, 2019, 05:59 PM IST
RAW மற்றும் IP அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் மோடி உத்தரவு title=

புதுடெல்லி: மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு, ரா அமைப்புக்கு சுமந்த்குமார் கோயல் மற்றும் புலனாய்வு பிரிவு (ஐபி) அமைப்புக்கு அரவிந்த்குமார்  ஆகியோரை நியமித்துள்ளது.

தற்போது ரா அமைப்பின் தலைவராக உள்ள அனில் குமார் தஸ்தானா மற்றும் ஐ.பி. அமைப்பின் இயக்குனராக உள்ள ராஜீவ் ஜெயின் ஆகியோர் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதாவது ஜூன் 29 அன்று ஓய்வு பெறுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு தலைவராக இருக்கும் பிரதமர் மோடி, இந்திய உளவுத்துறையில் ஒன்றான ரா அமைப்புக்கும், புலனாய்வு பிரிவு (ஐபி) அமைப்புக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, இந்திய உளவுத்துறையில் ஒன்றான ரா அமைப்புக்கு சுமந்த்குமார் கோயல் மற்றும் புலனாய்வு பிரிவு (ஐபி) அமைப்புக்கு அரவிந்த்குமார் நியமித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமந்த் கோயல் 1984 ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற இந்திய விமானப்படை தாக்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவற்றை திட்டமிட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்தவர்களில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரவிந்த் குமார் 1984 ஆம் ஆண்டு அசாம், மேகாலயா பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். பீகார் பிரிவு, உளவுத்துறை தலைவராக இருந்தவர். நக்ஸல் விவகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கவனித்துள்ளார். பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News