புதுடெல்லி: ஹரியானாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சூழ்நிலை கல்வி நிறுவனங்களை சில நாட்களுக்கு மூட உத்தரவிடுமாறு அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளது.
இருப்பினும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இந்த மாணவர்களின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர் வீட்டு தனிமைப்படுத்தலில் (Home Quarantine) உள்ளனர் என்றும் கூறப்பட்டது.
புதுப்பிப்புகளின்படி, பாதிக்கப்பட்ட மாணவர்களில் 91 பேர் ரேவாரி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். ஜிந்த் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் ஆகியோரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மற்றொரு புதுப்பித்தலின் படி, ரேவாரி மாவட்டத்தில் குண்ட் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மாதிரிகளில் 35 மாணவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகள், சுகாதார வழிகாட்டுதலின் படி சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அதிகாரிகள் உன்னிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தவிர, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நிலைமை குறித்து பதிலளித்த மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ், சுகாதாரத் துறை குழுக்கள் அனைத்து பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களை பரிசோதிக்கும் என்று கூறினார்.
நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) சரியாகப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் பள்ளிகளில் கிட்டத்தட்ட 4,800 ரேண்டம் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாக ஜிந்த் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மஞ்சீத் சிங் தெரிவித்தார்.
ALSO READ: மாணவர்கள் கவனத்திர்க்கு! CBSE 10, 12 வகுப்பு தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!
"இதுவரை, 30 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உடல்நிலை சீராக உள்ளது என்றாலும், சுகாதாரத் துறை குழுக்கள் உன்னிப்பாக அவர்களைக் கண்காணித்து வருகின்றன” என்றார் அவர்.
ஹரியானாவின் (Haryana) ஜஜ்ஜர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் கூறுகையில், 34 மாணவர்களுக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
"தீபாவளிக்கு முன்னர் 1,200 மாதிரிகளை நாங்கள் தோராயமாக சேகரித்தோம். 34 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு COVID-19 உறுதி செய்யப்பட்டது" என்று அவர் கூறினார்.
நவம்பர் 2 முதல் ஹரியானாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் இந்த வகையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இங்கு அனைத்து வகுப்புகளும் திறக்கப்படவில்லை என்பதும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பெற்றோரின் முன் அனுமதியுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டுவது மிகவும் ஆபத்தான் விஷயம். அதன் விளைவுகளை நாம் பல மாநிலங்களில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
ALSO READ: 10, 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான கட்டணம் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் பதில் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR