புலி, பூனை தொடர்ந்து பசுவுக்கும் கொரோனாவா..? ஆந்திரா-வில் அதிர்ச்சி...

புலி, பூனை என விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவில் சுமார் 70 பசுக்கள் மயக்க நிலையில் காணப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Apr 24, 2020, 07:31 AM IST
புலி, பூனை தொடர்ந்து பசுவுக்கும் கொரோனாவா..? ஆந்திரா-வில் அதிர்ச்சி... title=

புலி, பூனை என விலங்குகளுக்கும் கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவில் சுமார் 70 பசுக்கள் மயக்க நிலையில் காணப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதன்கிழமை காலை இப்ராஹிம்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோண்டப்பள்ளியில் உள்ள கொட்டகையில் 70-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மயக்க நிலையில் காணப்பட்டுள்ள. இதனையடுத்து பசுக்களுக்கு கொரோனா பரவியதால் தான் மயக்க நிலையில் காணப்படுகிறது என ஊர் மக்கள் மத்தியில் வதந்திகள் பரவ துவங்கியது. மற்றும் கொரோனா பாதிப்பால் பசுக்களின் கண்கள் மற்றும் தோலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.

READ | அரசு ஊழியர்களின் 1 மாத சம்பளத்தை 5 மாத தவணைகளில் கழிக்க அரசு திட்டம்!

இதையடுத்து கவலையடைந்த கிராமவாசிகள் காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து மாடுகளின் மாதிரிகளை சேகரித்தனர். 

சோதனைக்கு பின்னர் கோடைகாலத்தில் பசுக்கள் மற்றும் எருமைகள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஒரு நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டுள்ள என்று கால்நடை மருத்துவர்கள் தெளிவுபடுத்திய பின்னரே கிராம மக்கள் பெருமூச்சு விட்டனர்.

READ | புத்தக கடைகள், ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி...

விலங்குகள் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய கால்நடை மருத்துவர்கள், கோண்டப்பள்ளி மாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோய் தொற்று என்று கூறினார். காலை 8 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அவர்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், இதுவரை எந்த மாடும் இறக்கவில்லை என்றும் இப்ராஹிம்பட்டனம் வட்ட ஆய்வாளர் கே.ஸ்ரீதர் தெரிவித்தார். "அனைத்து மாடுகளுக்கும் கொட்டகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் கிராமத்திற்கு வெளியே துணிகர விடக்கூடாது என்று உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கவலைப்படத் தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

Trending News