மாயமான Dr Bomb கான்பூரில் கைது செய்யப்பட்டார்...

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பரோலில் வெளியே வந்த குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரான ஜலீஸ் அன்சாரி மாயமனத்தை அடுத்து, இன்று கான்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 17, 2020, 07:48 PM IST
மாயமான Dr Bomb கான்பூரில் கைது செய்யப்பட்டார்...
File photo

புது டெல்லி: ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜலீஸ் அன்சாரி கான்பூரிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அன்சாரி கான்பூரிலிருந்து லக்னோவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். உ.பி. வழியாக நேபாளத்திற்கு தப்பிச் செல்லத் குற்றவாளி ஜலீஸ் அன்சாரி முயற்சி செய்ததாக டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்தார். கான்பூரில் ஒரு மசூதியை விட்டு வெளியேறும்போது அவர் கைது செய்யப்பட்டார். அவரது பரோல் முடிவதற்கு ஒரு நாள் முன்பு அவர் காணாமல் போனார் என்று உங்களுக்கு சொல்கிறோம். 

ஜலீஸ் அன்சாரி அஜ்மீர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அன்சாரியின் பெயர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக அவர் "டாக்டர் வெடிகுண்டு" என்று அழைக்கப்பட்டு வருகிறார். 

அன்சாரியை எஸ்.டி.எஃப் விசாரிக்கும் என்று டிஜிபி கூறினார். அன்சாரி தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். ராஜதானி எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டில் அவரை முதலில் சிபிஐ கைது செய்தது. 

1993 ஆம் ஆண்டு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ராஜஸ்தானில் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புதான் ஜலிஸுக்கு எதிரான மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதற்காக அவர் அஜ்மீர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். 1993 டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ஹைதராபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதிலிருந்து 2015 இல் விடுவிக்கப்பட்டார்.

ஆயிரக்கணக்கான ரூபாய் நோட்டும் - டாக்டர் வெடிகுண்டும்: 
ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டபோது, ​​அவர் வைத்திருந்த ரூ.47780, ஒரு பாக்கெட் டைரி, மொபைல் போன் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை மீட்டதாக உ.பி. போலீசார் தெரிவித்தனர். நேரடி வெடிகுண்டுகள் மற்றும் டி.என்.டி ஆகியவற்றை வெடிக்கச் செய்வதில் ஜலீல் அன்சாரி ஒரு நிபுணராகக் கருதப்படுவதாகவும் டிஜிபி குறிப்பிட்டார். நாட்டை உலுக்கிய குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்ட ஜலீஸ் அன்சாரி, பரோல் முடிவதற்கு ஒரு நாள் முன்பு மாயமாகினார். அன்சாரி காணாமல் போன பின்னர், நேபாளம் வழியாக நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்ற கோணத்தில் உத்தரபிரதேச காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.

எப்படி "டாக்டர். வெடிகுண்டு" ஆனார்:
நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் அன்சாரியின் பெயர் குற்றம் சாட்டில் உள்ளது. இதனால் தான் அவர் டாக்டர் வெடிகுண்டு என்று அழைக்கப்பட்டார். ராஜதானி எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு வைத்ததற்காக 1994 ஆம் ஆண்டில் சிபிஐ அவரை முதலில் கைது செய்தது. புனேவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1992 ல் நடந்த பாப்ரி மஸ்ஜித் சம்பவத்திற்குப் பிறகு, அவர் தனது சகாக்களுடன் சேர்ந்து வெடிகுண்டுகளை புதைத்தார் என்று கூறப்படுகிறது. சமீபத்திய தீர்ப்பில், கிர்னா ஆற்றில் குண்டு வெடித்ததில் சோதனை செய்த குற்றத்திற்காக அவருக்கு 2018 ஆம் ஆண்டில் மாலேகான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

நமாஸுக்கு சென்ற அன்சாரி திரும்பவில்லை:
அன்சாரி மும்பையைச் சேர்ந்தவர். அன்சாரி ராஜஸ்தானின் அஜ்மீர் மத்திய சிறையில் இருந்து 21 நாட்களுக்கு பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) சரணடையவிருந்தார். பரோலின் போது, ​​அன்சாரி தினமும் காலை 10:30 மணி முதல் 12 மணி வரை மும்பையில் உள்ள அக்ரிபாடா காவல் நிலையத்திற்கு வந்து ஆஜராகி செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் நேற்று (வியாழக்கிழமை) காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிற்பகலில், 35 வயதா அன்சாரியின் மகன் ஜைத் அன்சாரி காவல் நிலையத்தை அடைந்து தந்தை காணாமல் போனதாக புகார் அளித்தார். அவர் நமாஸ் படிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவர், இதுவரை திரும்பவில்லை எனக் அவரது மகன் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.