Watch: சின்னாப்பின்னமான ரயில் - போன வாரம்தான் பிரதமர் தொடங்கிவச்சாரு; மோதிய மாடுகளுக்கு என்னாச்சு?

மும்பையில் இருந்து காந்திநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், எருமை மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முகப்பு பகுதி சேதாரமாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 6, 2022, 09:22 PM IST
  • 3-4 எருமைகள் குறுக்கே வந்ததால் விபத்து.
  • மோதிய எட்டு நிமிடங்களில் ரயில் புறப்பட்டுவிட்டது.
  • முகப்பு பகுதி மட்டும் சேதாரம் ஆகியுள்ளது.
Watch: சின்னாப்பின்னமான ரயில் - போன வாரம்தான் பிரதமர் தொடங்கிவச்சாரு; மோதிய மாடுகளுக்கு என்னாச்சு? title=

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து குஜராத்தின் தலைநகர் காந்திநகர் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் இன்று காலையில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே எருமை மாடுகள் புகுந்ததால், அவற்றின் மீது மோதியதில் ரயிலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ரயில்வே துறையின் செய்தித்தொடர்பாளர்,"மூன்று - நான்கு எருமை மாடுகள் திடீரென மும்பை - காந்திநகர் வந்தே பாரத் ரயிலின் குறுக்கே வந்தன. ஃபைபர், பிளாஸ்டிக்கால் ஆன முகப்பு பகுதி மட்டும் சிறிது சேதமடைந்தது. மற்றபடி ரயிலுக்கு வேறெந்த பிரச்சனையும் இல்லை. 

மாடுகள் மீது மோதிய எட்டாவது நிமிடமே ரயில் புறப்பட்டுவிட்டது. குறித்த நேரத்தில் காந்திநகரையும் அடைந்துவிட்டது. குஜராத்தின் கைரத்பூர்-வத்வா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மாடுகளை தனித்துவிட வேண்டாம் என அப்பகுதி கிராம மக்களுக்கு ரயில்வே துறை சார்பில் அறிவுரை கூறப்பட்டுள்ளது" என்றார். மேலும், ரயில் மோதிய எருமை மாடுகள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க | வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை துவக்கி வைத்து பயணித்த பிரதமர் மோடி

இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கு இடையே செல்லும் இந்த அதிவேக அதிவிரைவு ரயில், கடந்த செப். 30ஆம் தேதி பிரதமர் மோடியால் குஜராத்தில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்களில், இது மூன்றாவது வழித்தடமாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என கடந்தாண்டு சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று மொத்தம் 75 ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் உட்சபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ., என்றும்,  52 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை அதனால் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலால் வேகத்தை சீராக குறைக்கவும் முடியும் அதிகரிக்கவும் முடியும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறைகிறது. உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான ரயில்களில் செல்ல எட்டு மணிநேரமாகும். ஆனால், வந்தே பாரத் ரயில், சென்னை - மதுரை செல்லும் மற்ற அனைத்து ரயில்களையும் விட 40-50% (சுமார் 4 மணிநேரம்) விரைவாக சென்றுவிடும். 

மேலும் படிக்க | இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News