20 குழந்தைகளை பிணைக் கைதியாக்கி தனது வீட்டில் சிறை வைத்துள்ள கொடூரமான குற்றவாளி

உ.பி-யில் ஒரு ஜாமீனில் வெளிவந்த ஒரு குற்றவாளி 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்துள்ளான். குழந்தைகளை காப்பாற்ற ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2020, 11:14 PM IST
  • உ.பி.யின் ஃபாரூகாபாத்தில் உள்ள தனது வீட்டில் ஒரு கொடூரமான குற்றவாளி 20 குழந்தைகளை பிணைக் கைதியாக வைத்துள்ளார்.
  • பிணைக் கைதிகளை மீட்க ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முழு கிராமத்திலும் பீதி.
  • சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ் தனது சித்தப்பாவை கொன்றதாக கூறப்படுகிறது.
  • ஒரு வருடம் முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு 10 வயது மகள் உள்ளார்.
20 குழந்தைகளை பிணைக் கைதியாக்கி தனது வீட்டில் சிறை வைத்துள்ள கொடூரமான குற்றவாளி title=

ஃபுருகாபாத்: இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் உத்தரபிரதேசத்தின் ஃபருகாபாத் மாவட்டத்தில் கொலை வழக்கில் ஜாமில் வெளிவந்த ஒரு குற்றவாளி 20 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலரை தனது வீட்டில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்த போது, ​​அவர் கதவின் பின்னால் இருந்துக் கொண்டு குண்டுகளை வீசி உள்ளார். மேலும் துப்பாக்கி தோட்டாக்கள் சுட்டுள்ளார். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு கிராமவாசி காயமடைந்துள்ளார்.. வெடிகுண்டு சரிந்து விழுந்ததில் இரண்டு போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக, முழு கிராமத்திலும் பயமும் பீதியும் நிலவுகிறது. 

ஆதாரங்களின்படி, கடந்த ஒரு மணி நேரமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. குழந்தைகளை மீட்க ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக ஐஜி ரேஞ்ச் மோஹித் அகர்வால் தெரிவித்தார்.

தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி, குற்றவாளி வீட்டில் உள்ள எல்பிஜி சிலிண்டரை வெடிக்க வைத்து, முழு வீட்டையும் நாசம் செய்துவிடுவதாக அச்சுறுத்துகிறார். வீட்டின் உள்ளே இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. SOG மற்றும் மீதமுள்ள அதிகாரிகள் சுற்றியுள்ள வீடுகளின் கூரைகளை கையகப்படுத்தியுள்ளனர். டி.எம் மற்றும் எஸ்.எஸ்.பி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.

கொலை வழக்கில் சிறைக்குச் சென்றவர்:
குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளை அழைக்குமாறு கோருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று அகர்வால் கூறுகிறார். இதுவரை குற்றவாளி எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று அவர் கூறினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ் தனது சித்தப்பாவை கொன்றதாக கூறப்படுகிறது. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஒரு வருடம் முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு 10 வயது மகள் உள்ளார் எனக் கூறப்படுகிறது.

நாட்டு துப்பாக்கியால் சுட்டார்:
வியாழக்கிழமை பிற்பகல், மகளின் பிறந்தநாள் என்றுக் கூறி, அக்கம் பக்கம் கிராமத்தில் உள்ள குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். குழந்தைகள் அனைவரும் மதியம் 2:30 மணிக்கு அவரது வீட்டை அடைந்தனர். இதற்குப் பிறகு, வீட்டை உள்ளே இருந்து பூட்டி விட்டார். மாலை 4:30 மணியளவில், ஒரு பெண் தனது குழந்தையை அழைத்துச் செல்ல சுபாஷின் வீட்டிற்கு வந்தபோது, ​​குழந்தைகள் உள்ளே பூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் தொடர்ந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் அவர் திறக்க வில்லை. இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவரிடம் கதவை திறங்கள், இல்லையென்றால் கதவு உடைக்கப்படும் என்று கூறியுள்ளனர். உடன்வே குற்றவாளி துப்பாகியால் சுடத் தொடங்கியதோடு, வெடிகுண்டுகளையும் வீசி உள்ளான்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News