கட்ச்ரோலியில் நக்சல்ட் கமாண்டோ படை வீரர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் 4 CRPF வீரர்கள் உயிரிழப்பு!!
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் 16 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை இலக்காக கொண்டு நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் 10 வீரர்கள் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#UPDATE Official sources: 10 security personnel have lost their lives in an IED blast by Naxals in Gadchiroli. #Maharashtra https://t.co/KB3rT3XOLK
— ANI (@ANI) May 1, 2019
மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வாகன டிரைவரும் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
முன்னதாக நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள் எரித்துள்ளனர். இன்று காலை சாலை கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25 வாகனங்களையும் மாவோயிஸ்டுகள் அடித்து நொருக்கி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை கொண்டாட அம்மாநிலம் முழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில் மாவோஸ்டுகளின் இந்த வெறிச் செயல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படைவீரர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. மேலும், விவரங்களுக்கு காத்திருக்கவும்.