சர்ச்சைக்குள்ளான UAPA மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்: ஆதரவு 147; எதிர்ப்பு 42

ஏற்கனவே மக்களவையில் நிறைவேறிய யுஏபிஏ திருத்த மசோதா, இன்று கடும் எதிர்ப்புக்களுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 2, 2019, 01:54 PM IST
சர்ச்சைக்குள்ளான UAPA மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்: ஆதரவு 147; எதிர்ப்பு 42 title=

புதுடில்லி:ஏற்கனவே மக்களவையில் நிறைவேறிய யுஏபிஏ திருத்த மசோதா, இன்று கடும் எதிர்ப்புக்களுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த யுஏபிஏ மசோதா (UAPA) மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்த உதவும். 

இது குறித்த கலந்துரையாடலுக்கு பதிலளித்த அமித் ஷா, காங்கிரஸை குறிவைக்கும் போது, ​​தனிப்பட்ட நலனுக்காக சட்டத்தை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ் வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று கடுமையாக சாடினார். பலவீனமான சட்டம் காரணமாக, துரோகிகள் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்று அவர் கூறினார். பயங்கரவாதி யாசின் பட்கல் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தால், அவனை பற்றி எல்லா காவல் நிலையங்களிலும் ஒரு படம் மற்றும் கைரேகை இருந்திருக்கும். ஆனால் அவனை பயங்கரவாதியாக அறிவிக்கவில்லை. எமர்ஜென்சி காலத்தில் என்ன நடந்தது என்பதால் அனைவரும் அறிவார்கள். எனவே சட்டத்தை தவறாக பயன்படுத்துவது பற்றி காங்கிரஸ் பேச தகுதி இல்லை. உங்கள் கடந்த காலத்தைப் பாருங்கள் எனப் பேசினார். 

ஏற்கனவே மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிராக ஏன் கடுமையான சட்டங்களை உருவாக்குகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன?" நான் சொல்கிறேன், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான மற்றும் மிகவும் கடுமையான சட்டம் இருக்க வேண்டும். இந்த சட்டம் இந்திரா காந்தி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அதில் சிறிய திருத்தத்தை நாங்கள் (மத்திய அரசு) செய்கிறோம் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, காங்கிரஸ், திமுக உட்பட சில கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி யுஏபிஏ மசோதா (UAPA) மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்பொழுது மசோதாவுக்கு ஆதரவாக 143 ஓட்டும், எதிராக 42 ஓட்டும் பதிவானது. இதன்மூலம் ராஜ்யசபாவிழும் யுஏபிஏ மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் யுஏபிஏ மசோதா நிறைவேறி உள்ளதால், இது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கிய பிறகு, இந்த மசோதா சட்டமாகும்.

Trending News