தில்லியில் 24% மக்கள் COVID-19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எனினும், இதில் பெரும்பாலானோர் அறிகுறிகள் அற்றவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த ஆய்வை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தேசிய நோய் கட்டுபாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வு, 2020 ஜூன் மாதம் 27ம் தேதி முதல், 2020 ஜூன் மாதம் 10ம் தேதி வரை நடத்தப்பட்டது.
தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில், மொத்தம் 21,387 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் நோயை எதிர்க்கும் ஆண்டி பாடிகள் எந்த அளவிற்கு இருக்கின்றன என்பதை பரிசோதிக்க இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. COVID-19 தொற்று ஏற்பட்டவரிடம், எந்த அளவிற்கு ஆண்டி பாடிகள் உள்ளன என்பதை பரிசோதிக்க சோதனை நடத்தப்பட்டது.
ALSO READ | COVID-19 எதிரொலி: பொது போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு..!
இந்த பரிசோதனை முடிவுகள் எடுத்துரைக்கும் தகவல் என்னவென்றால்.
- கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஆறுமாதங்கள் ஆகி விட்ட நிலையில், பல இடங்களில் நெருக்கமான மக்கள் தொகை கொண்ட தில்லி மாநகரத்தில், 23.48 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட சில பகுதிகளில் தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கட்டுப்பாட்டு மையங்களில், தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
- தொற்று நோய் பரவலை தடுக்கும், தனி நபர் விலகல், மாஸ்க் பயன்படுத்துதல், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளை தவிர்த்தல், போன்றவை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
தற்போது, கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், மும்பையை பின்னுக்கு தள்ளி, வேகமாக முதலிடத்தை பிடித்து வரும் தில்லியில், இது வரை 1,23,747 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது வரை 3,663 பேர் கொரோனா தொற்றின் காரணமாக இறந்து விட்டனர்.
ALSO READ விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு
இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை மொத்தம் சுமார் 11 ½ லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்து விட்டனர்.