காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். குப்வாரா மாவட்டத்திற்கு சென்ற அவர் அங்குள்ள ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு நிலவரத்தைக் கேட்டறிந்தார்.
கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் , பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 24 மணிநேரமும் விழிப்புடன் கடமையாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். எந்த ஒரு ஆபத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதைக் கண்டு நிர்மலா சீதாராமன் அவர்களுடன் கலந்துரையாடினார்.