பத்மாவத் திரைப்பட மறு ஆய்வு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை விசாரிப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படும் பத்மாவதி எனும் ''பத்மாவத்'' திரைப்படம் வரும் ஜன.,25-ஆம் நாள் நாடுமுழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எனினும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனவும் நாடு தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அவர்கள், பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வதாக ஆயிரக்கணக்கான பெண்கள், கையில் வாளுடன் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதே போன்று சித்தூர்கர் பகுதியில் தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக 1908 பெண்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். சித்தூர்கர் கோட்டையை நோக்கி கண்டன பேரணியும் நடத்தப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.
ஆகையால், இந்த முடிவை மாற்றிக் கொண்டு, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது, நாளை விசாரணைக்கு வர உள்ளது என்று ராஜஸதான் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கதாரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உள்துறை மந்திரி குலாப் சந்த் கூறும்போது;- உச்சநீதிமன்றத்திற்கு முன்பாக நாங்கள் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தோம். இது நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாளை விசாரணைக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
We filed the review petition before the Supreme Court. It has been accepted by the Court and it has assigned the hearing date for tomorrow: Gulab Chand Kataria, Home Minister, Rajasthan. #Padmaavat pic.twitter.com/SWtTXX0Qxk
— ANI (@ANI) January 22, 2018