PoK-வில் கொரோனாவின் பிடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், செய்வதறியாமல் தவிக்கும் பாகிஸ்தான்!!

PoK மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும், பாராக்குகளிலும் கொரோனா தொற்றும் மிக வேகமாக பரவியுள்ளது. கொரோனா நெருக்கடியை முறையாக சமாளிக்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு.

Last Updated : Jul 4, 2020, 04:56 PM IST
  • பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கோவிட் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.
  • கொரோனா நெருக்கடியை முறையாக சமாளிக்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு.
  • கடந்த சில நாட்களில், PoK மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக ஏராளமான போராட்டங்களை நடத்தினர்.
PoK-வில் கொரோனாவின் பிடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், செய்வதறியாமல் தவிக்கும் பாகிஸ்தான்!! title=
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் கில்கிட்-பல்திஸ்தானில் கோரோனா பரவுவதைத் தடுக்க, பாகிஸ்தான் (Pakistan) அரசு தவறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தையும் கொரோனா (Corona) விட்டுவைக்கவில்லை. இந்தப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 53 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தத் தொற்றால் இறந்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாண்டு ஜூன் வரை, பாகிஸ்தான் இராணுவத்தில் 2500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 827 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
PoK மற்றும் கில்கிட்-பல்திஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம்களிலும் (Military Camps) பாராக்குகளிலும் தொற்று மிக வேகமாக பரவியுள்ளது. கொரோனா தொற்றை முறையாக சமாளிக்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களில் இது குறித்து பாகிஸ்தான் மக்கள் பல போராட்டங்களை செய்துள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொரோனா பாசிடிவ் மக்கள் PoK மற்றும் கில்கிட் பல்திஸ்தான் பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 கொரோனா தொற்று பரவி இருந்தாலும், பாகிஸ்தான் ராணுவம் PoK-வுக்கு அருகில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அதிக அளவில் படைகளை நிறுத்தியுள்ளது. பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் (India) ஊடுருவ காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் செய்யும் போர் நிறுத்த மீறல்களுக்கு இந்தியா தகுந்த பதிலடியை அளித்து வருகிறது. கடந்த மாதம், பாகிஸ்தான் 418 முறை போர் நிறுத்தத்தை மீறியது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 46 பேர் பலத்த காயமடைந்தனர். போர் நிறுத்தத்தை மீறி காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் சதி செய்து வருகிறது.
ALSO READ: காஷ்மீரில் என்கௌண்டர்: 1 பயங்கரவாதி சுட்டுக்கொலை, ஆயுதங்கள் மீட்பு!!
நாட்டின் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் படி, 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய தயாராக உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 ஆவது பிரிவு அகற்றப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத சதித்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், பாதுகாப்புப் படையினர் 131 பயங்கரவாதிகளை அழித்து விட்டனர். ஜூன் மாதத்தில் மட்டும், ஒரு மோதலில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆகையால் காஷ்மீரின் சூழலை கெடுக்க பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதிலேயே குறியாக இருக்கும் பாகிஸ்தான் தன் நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கண்டும் காணாமல் உள்ளது. 
ALSO READ: பாகிஸ்தானில் நடக்கும் அட்டூழியம், முடக்கப்படும் ஊடக சுதந்திரம்!!

 

Trending News