திருப்பதியில் கண்ணாடி பாட்டிலில் குடிநீர்! மக்கள் கருத்து என்ன?

திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் விரைவில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்க உள்ளது.

Last Updated : Feb 21, 2020, 02:56 PM IST
திருப்பதியில் கண்ணாடி பாட்டிலில் குடிநீர்! மக்கள் கருத்து என்ன? title=

திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் விரைவில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்க உள்ளது.

திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் - வெங்கடேஸ்வரரின் புனித தங்குமிடம் அமைந்துள்ள திருமலை நகரம் விரைவில் பிளாஸ்டிக் இல்லாததாக இருக்கும். திருமலை திருப்பதி தேவஸ்தனம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனையை தடை செய்ய முடிவு செய்ததால், யாத்ரீகர்கள் குடிநீரைப் பெறுவதில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஜீ மீடியாவிடம் டாக்டர் கிருஷ்ணாமராஜு என்ற ஒருவர் கூறியதாவது., திருமலை நகரத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கான நடவடிக்கை வரவேற்கத்தக்க படியாகும், ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாத்ரீகர்களுக்கு வசதியாக ஒரு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

ஜனவரி 1, 2020 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர், அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற நீர் விற்பனையாளர்கள் ஒன்று கூடி, கூட்டாக "கண்ணாடி நீர் பாட்டில்" என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். 40 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். சோதனை அடிப்படையில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் பாட்டிலை திரும்ப கொடுத்தால் 20 ரூபாய் திரும்ப வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

அமிர்தசரஸைச் சேர்ந்த மற்றொரு யாத்ரீகர் வினீத் இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி என்றும், இது நாடு முழுவதும் நகலெடுக்கப்படலாம் என்றும் கூறினார். கர்நாடகாவைச் சேர்ந்த ஹர்ஷத் லோகண்டேவும் இந்த யோசனையைப் பாராட்டினார்.

Trending News