விவசாயிகளை சமாதானப்படுத்த ₹.18000 கோடி நிதியை வழங்கியை வழங்கிய பிரதமர்!

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு மத்திய அரசு விரும்புவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்..!

Last Updated : Dec 26, 2020, 07:16 AM IST
விவசாயிகளை சமாதானப்படுத்த ₹.18000 கோடி நிதியை வழங்கியை வழங்கிய பிரதமர்! title=

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு மத்திய அரசு விரும்புவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்..!

பிரதன் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 என மொத்தம் ரூ.18,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேற்று வழங்கினார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி உத்தரவின் பேரில் 2,000 ரூபாய் உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சென்றடைந்தது. ஏற்கனவே, பதிவு செய்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் (farmers) நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணையைப் பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (PM-KISAN) தொடங்கப்பட்டது. ஒரு சில விலக்குகளைத் தவிர, நாட்டிலுள்ள விளைநிலம் வைத்துள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் நிதி ஆதரவை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

PM-KISAN திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி நன்மை வழங்கப்படுகிறது, தலா ரூ .2,000 என்ற முறையில் மூன்று சம தவணைகளில் அவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. 

ALSO READ | இந்த விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் பலன் கிடைக்காது; காரணம் தெரிந்து கொள்ளுங்கள்!!

கிளர்ச்சியடைந்த விவசாயிகளை சமாதானப்படுத்திய பிரதமர், தனது 52 நிமிட உரையாடலில் ஐந்து பெரிய செய்திகளை அவர்களுக்கு வழங்கினார். மேலும், MSP இருக்கும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். APMC மண்டிஸ் மூடப்படப் போவதில்லை என்று கூறிய அவர், ஒப்பந்த விவசாயத்தின் போது விவசாயிகளுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டைக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளவர்களை கடுமையாக குற்றம் சாட்டும் அதே வேளையில், யாரும் தங்கள் நிலங்களை அபகரிக்க முடியாது என்றும் பிரதமர் அவர்களுக்கு உறுதியளித்தார். வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை விடுவித்தல் மற்றும் நெடுஞ்சாலைகளை கட்டணமில்லாமல் செய்வது போன்ற தொடர்பில்லாத சிக்கல்களால் MSP உத்தரவாதம் குறித்த உண்மையான அச்சங்கள் மறைந்துவிட்டன என்றார். மேலும், மூன்று புதிய பண்ணை சட்டங்களை வலுவாக பாதுகாத்து, விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு மத்திய அரசு விருப்பமுடன் உள்ளது. ஆனால், அரசியல் ஆதாயம் தேட முயலும் சிலா் விவசாயிகள் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதைத் தடுத்து வருகின்றனா் என்றார். 

விவசாயிகளை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது. விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். ஆனால், இத்திட்டத்தின் பலன் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 70 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்குச் சென்றடையவில்லை. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசே அதற்குக் காரணம். PM-KISAN திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பித்த விவசாயிகளின் தகவல்களை மாநில அரசு உறுதிப்படுத்தவில்லை. முதல்வா் மம்தாவின் இதுபோன்ற கொள்கைகள் மாநிலத்தை சீா்குலைத்துவிட்டன. 

ALSO READ | PM Kisan திட்டத்தின் கீழ் இந்த மாநில விவசாயிகளுக்கு மட்டும் 10,000 ரூபாய் கிடைக்கும்: விவரம் உள்ளே!!

சுயநலத்துக்காக அரசியலில் ஈடுபட்டு வருபவா்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா். மேற்கு வங்க விவசாயிகள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து குரலெழுப்பாத எதிா்க்கட்சியினா், டெல்லியில் விவசாயிகளைத் தவறாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா் மோடி.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News