மோடி காலெடுத்து வச்சதே சந்திராயன்-2 திட்டத்தின் பின்னடைவு: குமாரசாமி!

பிரதமர் மோடி இஸ்ரோவுக்குச் சென்றதன் விளைவாகவே சந்திரயான் 2 பின்னடைவைச் சந்தித்ததாக குமாரசாமி சர்ச்சையாக பேசியுள்ளார்!!

Last Updated : Sep 13, 2019, 02:11 PM IST
மோடி காலெடுத்து வச்சதே சந்திராயன்-2 திட்டத்தின் பின்னடைவு: குமாரசாமி! title=

பிரதமர் மோடி இஸ்ரோவுக்குச் சென்றதன் விளைவாகவே சந்திரயான் 2 பின்னடைவைச் சந்தித்ததாக குமாரசாமி சர்ச்சையாக பேசியுள்ளார்!!

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இந்நிலையில், இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி சென்றதால் ஏற்பட்ட கெட்ட சகுனமே சந்திராயன் 2 திட்டத்தின் பின்னடைவுக்கு காரணம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

செய்தியாளர்களிடம் HD குமாரசாமி கூறுகையில்; இந்தத் திட்டத்துக்கு 2008 - 2009-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் திட்டத்தின் பின்னணியில் தான் இருப்பது போல காட்டிக் கொள்ள பிரதமர் மோடி இஸ்ரோவுக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் 10 முதல் 12 வருட கடும் உழைப்பு வீணாகி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இஸ்ரோவுக்குச் சென்ற கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவையும் சில மத்திய அமைச்சர்களையும் பிரதமர் மோடி ஒரு குறிப்புக் காகிதம் அனுப்பி அவர்கள் அங்கிருக்க அவசியமில்லை எனக் கூறி விரட்டி விட்டதாகவும் எதிர்த்துக் கேட்க எவருக்கும் துணிச்சல் இல்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளார். 

இவரின் சர்ச்சை கருத்துக்கு பாஜகவிர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  

 

Trending News