புதுடெல்லி: அரசியலில் நாம் பல தலைவர்கள் வருவதையும், பொறுப்பு வகிப்பதையும் காண்கிறோம். ஆனால், சிலர் மட்டுமே மக்களுக்கும் பிடித்தமானவர்களாய், தங்கள் கட்சியில் உள்ளவர்களுக்கும் பலமாய், மற்ற கட்சிக்காரர்களுக்கும் பக்குவமான ஆளுமையாய் இருக்கிறார்கள். அப்படி இருந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்களில் ஒருவர்தான் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள். இன்று அவரது பிறந்தநாளன்று பிரதமர் மோடி உட்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தனது முன்னாள் அமைச்சரவை சகாவும், மறைந்த பாஜக தலைவருமான அருண் ஜெட்லிக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் அவரது அன்பான ஆளுமை, புத்திசாலித்தனம், சட்ட விஷயங்களில் அவரது கூர்மை, அறிவாற்றல் ஆகியவற்றை என்றும் நினைவில் கொள்வார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மற்ற பாஜக (BJP) தலைவர்களும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்ந்தனர். பல ஆண்டுகளாக, பல பிரச்சனைகள் பூதாகாரமாக உருவெடுத்தபோது, கட்சியின் சார்பில், அவற்றிற்காக பேசி, கட்சியின் மிகவும் வெளிப்படையான குரலாக அவர் இருந்தார்.
மேலும் மிகக் கூர்மையான அரசியல் அறிவாற்றலைப் பெற்றவர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். 1952 ஆம் ஆண்டு பிறந்த அருண் ஜேட்லி (Arun Jaitley) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்தார்.
ALSO READ: உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி
''எனது நண்பரான அருண் ஜெட்லி ஜியை அவரது பிறந்த நாளில் நினைவுகூறுகிறேன். அவரது அன்பான ஆளுமை, புத்திசாலித்தனம், சட்ட விஷயங்களில் அவருக்கிருந்த அறிவுக்கூர்மை, ஆகியவற்றை அவருக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் எப்போதும் நினைவில் கொள்வார்கள். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்தார்'' என்று நரேந்திர மோடி (Narendra Modi) ட்வீட் செய்துள்ளார்.
அருண் ஜெட்லிக்காக தனது அஞ்சலியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), ஜெட்லி ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் அவரது அறிவாற்றலுக்கும் நுண்ணறிவுக்கும் ஒத்தவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளார்கள் என்றும் கூறினார்.
“அவர் இந்திய அரசியலுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கினார். மேலும் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் தேசத்திற்கு சேவை செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி'' என்று அவர் மேலும் தெரிவித்தார். பாஜக தலைவர் ஜே பி நட்டா, ஜெட்லி ஒரு சிறந்த சொற்பொழிவாளர் என்றும் அவரது பேச்சுத்திறன் மற்றும் திறமையான மூலோபாய உத்திகளுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் கூறினார்.
இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஜெட்லியின் பங்களிப்பையும், கட்சியை வலுப்படுத்துவதில் அவர் வகித்த பங்கையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) கூறினார்.
ALSO READ: Jammu Kashmir-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR