ஐதராபாத்தின் அடையாள சின்னமான சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதம் அடைந்தது.
ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்குவது சார்மினார் கோபுரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் மூலம் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணி நேற்றிரவு நடந்தது. அப்போது திடீரென்று ஒரு தூபியின் சிறுப்பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் சுமார் இரவு 11.30 மணியளவில் நடந்து உள்ளது. இந்த சம்பவம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்த புகழ்பெற்ற கட்டடத்தை பார்க்க அப்போது பல சுற்றுலா பயணிகள் கூடி இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.