புதுடெல்லி: கான்பூரின் பிகாரு கிராமத்தில் ஜூலை 2 முதல் அடுத்த நாள் காலைவரை கோரத் தாண்டவம் ஆடி எட்டு போலீஸ்காரர்களை கொன்றான் ரவுடி விகாஸ் துபே. கடமையாற்றச் சென்று சடலமாய் கொண்டுவரப்பட்ட காவலர்கள் எட்டு பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த Post-mortem report கொடுக்கும் அதிர்ச்சி அனைவரையும் ஆடிப் போகச் செய்திருக்கிறது. துபே மற்றும் அவரது கூட்டாளிகள் காவல்துறையினரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
சி.ஓ.மிஸ்ரா உட்பட எட்டு போலீஸ்காரர்களையும் கூர்முனை கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினரைக் கொல்வது மட்டும் விகாஸ் துபே மற்றும் அவனது குண்டர் கும்பலின் நோக்கமல்ல, காவல்துறையை பழிவாங்கும் நோக்கத்தில் கொடூரமாக கொலை செய்திருப்பதாக உத்தரபிரதேச காவல்துறை நம்புகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சி.ஓ.மிஸ்ரா மீது நான்கு தோட்டாக்கள் சுடப்பட்டுள்ளன. அதில் ஒரு புல்லட் அவரது தலையை தாக்க, மற்றொன்று மார்பிலும், அடுத்த இரண்டு வயிற்றையும் தாக்கியிருக்கிறது.
Read Also | ரவுடி விகாஸ் தூபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இது மட்டுமல்ல, விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளும் சி.ஓ. மிஸ்ரா மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னதாக அவரது காலில் வெட்டியிருக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மூன்று போலீஸ்காரர்கள் தலையில் சுடப்பட்டுள்ளனர். மற்றுமொருவர் முகத்தில் தோட்டா பாய்ந்துள்ளது. போலீஸார் எட்டு பேரும் வெறிபிடித்த ரவுடிகளினால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக கூறுகிறது.
பிகாரு கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு உறுப்பினர் குழுவை (one-member panel) அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் 2020 ஜூலை 2 முதல் ஜூலை 3 வரை நடத்திய சம்பவங்களும், 2020 ஜூலை 10 அன்று நடைபெற்ற என்கவுண்டர் மட்டுமல்ல, இந்த காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே என்கவுண்டர்களும் பொது முக்கியத்துவம் பெற்றவை" என்று அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"எனவே, இது தொடர்பாக விசாரிக்க வேண்டியது அவசியம்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சஷி காந்த் அகர்வால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையத்தின் தலைமையகம் கான்பூரில் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.