குர்தாஸ்பூர்: பாகிஸ்தான் எல்லையில் சக்ரி போஸ்ட் அருகே இருந்து சுமார் 11 கையெறி குண்டுகளை பஞ்சாப் போலீசார் வெள்ளிக்கிழமை மீட்டனர். வெள்ளிக்கிழமை, ஒரு பாகிஸ்தான் ட்ரோன் அந்த பகுதியில் வானில் பறந்ததை பார்த்த பஞ்சாப் காவல்துறையினர், தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது, இந்திய எல்லைக்குள் சுமார் 1 கி.மீ தூரத்தில், 11 கையெறி குண்டுகளை, காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இந்த 11 கையெறி குர்தாஸ்பூரின் டோரங்லா காவல் நிலையத்தின் கீழ் சலாச்சில் உள்ள ஒரு கிராமத்தின் வயல்களில் ஒரு பாக்கெட்டில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கையெறி குண்டுகளில் 'RGS' என்ற ஒரு குறி இருந்தது. இவை அனைத்தும் பாகிஸ்தானில் (Pakistan) தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளிலும் காணப்படும் குறியாகும்.
டோராங்லாவில் உள்ள காவல் நிலையத்தில், அடையாளம் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட காலிஸ்தானி பிரிவினைவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள சில கடத்தல்காரர்கள், சர்வதேச நெட்வொர்க் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்காக ட்ரோன்களைப் பயன்படுத்தினர். இந்த நடவடிக்கையுடன் தொடர்பு கொண்ட இரண்டு பேரை பஞ்சாப் (Punjab) காவல்துறை கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், லக்பீர் சிங் அல்லது லக்கா மற்றும் பச்சிதார் சிங் என அடையாளம் காணப்பட்டனர், அமிர்தசரஸ் போலீஸாருக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணைகள் மூலம், கைது செய்யப்பட்ட இவர்களுக்கும் அமிர்தசரஸ் சிறையில் தற்போது உள்ள நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட அவர்களது கூட்டாளிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஎஸ்பி ராணா மற்றும் டிஎஸ்பி நக்ரா தலைமையில், நடந்த விசாரணையில், லக்பீர் சிங் என்பவர், தற்போது அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்னாலாவின் 4 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், லக்பீரின் கூட்டாளியான சுர்ஜித் மாசிஹ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஒரு ஸ்மார்ட்போன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பகீர் ரிபோர்ட்: இஸ்ரேல் கம்பெனி Pegasus Spyware மூலம் ஐபோன்களை ஹாக் செய்துள்ளது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR