இந்தியாவில் ரஃபேல் விமானம் தரையிரங்கிய பிறகு பிரதமர் மோடி சமஸ்கிருத ட்வீட் மூலம் ஜெட் விமானங்களை வரவேற்று அது தரயிரங்கும் வீடியோவை பகிர்ந்து கொண்டார்,. அமித்ஷா ஷா பெருமைக்குரிய தருணம் என்று கூறுகிறார்
புதுடெல்லி: ரஃபேல் ஜெட் விமானங்கள் அம்பாலா விமான நிலையத்தில் பெற்றவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஜெட் விமானங்களை வரவேற்று, சமஸ்கிருத ட்வீட் செய்தார் . பிரதமர் மோடி ரஃபேல் தரையிறங்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.
ALSO READ | ரஃபேல் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?
ரஃபேல் ஜெட் விமானங்கள் தரையிறங்கியதை ‘வரலாற்று’ நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார், இது நாட்டிற்கு பெருமை தரும் தருணம் எனக் கூறினார்.
இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த மற்றும் பாதுகாப்பான தேசமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிபாட்டிற்கான உண்மையான சான்றாகும் என்றார். "இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த அதி நவீன சக்தி வாய்ந்த ரஃபேலை விமான படைக்கு வழங்கியுள்ள மாண்புமிகு பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | Rafale Updates: இந்தியாவை அடைந்த ரஃபேல் போர் விமானம்; 144 தடை உத்தரவு
பிரெஞ்சு துறைமுக நகரமான போர்டியாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமான நிலையத்திலிருந்து 7,000 கி.மீ தூரத்தை கடந்து 5 ரஃபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி இன்று அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த போர் ஜெட் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ரஃபேல் விமானங்கள் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை.
"பறவைகள் அம்பாலாவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளன" என்று பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார். பிராந்தியத்தின் ஒருமைப்பட்டிற்கு எதிராக இருப்பவர்கள் இந்த விமானத்தை பார்த்து அஞ்சுவார்கள் என சீனாவை பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்திய விமான விண்வெளியில் நுழைந்த பின்னர் இரண்டு சுகோய் 30 MKI விமானங்கள், அதனுடன் வந்தன. ரஃபேல் அம்பலாவில் தரையிறங்கியபோது விமானங்களுக்கு சல்யூட் வழங்கப்பட்டது
இந்திய விமானத்திற்காக 126 மீடியம் மல்டி-ரோல் காம்பாட் விமானத்தை (MMRCA) வாங்குவதற்கான ஏழு ஆண்டு காலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து, பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனில் இருந்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016, செப்டம்பர் 23, அன்று ரூ .59,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்திருந்தது.
முதல் ரஃபேல் ஜெட் கடந்த அக்டோபரில் பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்ட போது, ஒப்படைக்கப்பட்டது.