ராம்விலாஸ் பஸ்வான் மருத்துவமனையில் அனுமதி

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Last Updated : Jan 13, 2017, 09:33 AM IST
ராம்விலாஸ் பஸ்வான் மருத்துவமனையில் அனுமதி

பாட்னா: மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரியும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பீகார் மாநிலத்துக்கு வந்தார். நேற்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனே தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மனைவியும், மகன் சிராக் பஸ்வானும் அவருடன் இருந்து கவனித்து வருகிறார்கள். மருத்துவமனை வெளியே கட்சி தொண்டர்கள் குவிந்தனர்.

More Stories

Trending News