ஒடிசாவின் மயூர்பான்ஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த 19 அடி நீளமுடைய ராஜநாகம் பிடிபட்டது!
ஒடிசாவின் மயூர்பான்ஜ் கிராமப்பகுதியில் வசித்து வரும் ரஹியா சிங் என்பர் தனது படுக்கையில் இருந்து இரவு எழுந்து வெளியில் வந்துள்ளார். இதையடுத்து, அவர் படுக்கையின் கீழே எதோ அசைவதை கண்டுள்ளார். பின்னர் அவர் அதை டார்ச் லைட் அடித்து பார்க்கையில், அங்கு 19 அடி நீள ராஜநாகம் இருப்பதை கண்டுள்ளனர்.
இதை கண்ட ரஹியா சிங் குடும்பத்தினர், அலறியடித்து ஓடினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் முயற்சித்து பாம்பை உயிருடன் பிடித்தனர்.
Mayurbhanj: A 19-feet long King cobra was rescued from a house in Balipal village yesterday. It was later released into the forests. #Odisha pic.twitter.com/8rpM1FugFv
— ANI (@ANI) December 6, 2018
இது வரை பிடிபட்ட பாம்புகளிலேயே இதுவே மிக நீளமானதாக கருதப்படுகிறது. பின்னர் அதனை அடர் வனப்பகுதிக்கு கொண்டு போய் விட்டு விட்டனர்.