இன்று நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 25 புள்ளிகள் அடிப்படையில் ரெப்போ விகிதத்தில் 6.5 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டு முறை வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஜூன் மாதத்தில், ரொக்க இருப்பு விகிதம் அல்லது அடிப்படை கடன் விகிதம் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக 25 அடிப்படை புள்ளிகள் என 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி (ரெப்போ) 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வீட்டு கடன் மற்றும் வாகனக்கடன் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. குறுகிய கால கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
Meeting of the Monetary Policy Committee for the Fourth Bi-monthly Monetary Policy Statement, 2018-19https://t.co/O8lE17bQQd
— ReserveBankOfIndia (@RBI) August 1, 2018
இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கைபடி, 2019 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.8 சதவீத பணவீக்கமும், 2018-19 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் 4.8 சதவீதமாகவும், 2019-20 ஆம் முதல் காலாண்டில் 5 சதவீதத்திலும் பணவீக்கம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.