விப்ரோ (WIPRO) குழும தலைவர் Azim Premji உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி யாசிம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை அன்று மனு தாக்கல் செய்தனர்.
புதுடெல்லி (New Delhi): ஐடி துறையின் முக்கிய ஆளுமையாக உள்ள விப்ரோ (WIPRO) தலைவர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி யாசிம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ( SC) சனிக்கிழமை அன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய சம்மன் ரத்து செய்யப்பட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். Vidya, Regal மற்றும் Napean ஆகிய மூன்று நிறுவனங்களையும் Hasham முதலீட்டு மற்றும் வர்த்தக நிறுவனத்துடன் இணைத்ததை எதிர்த்து அசிம் பிரேம்ஜி அளித்த குற்றவியல் புகாரின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ALSO READ | சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள்... நடவடிக்கை எடுக்க UN வல்லுநர்கள் கோரிக்கை...!!!
இந்த மூன்று நிறுவனங்களும் 1974 இல் மறுசீரமைக்கப்பட்டன என்றும், 1980 ஆம் ஆண்டில் அவற்றின் பங்குதாரர்களும் இதே முறையில் இணைக்கப்பட்டுள்ளதாக அசிம் பிரேம்ஜியும் அவரது மனைவியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் மூன்று நிறுவனங்களில் ஏதேனும் இரண்டு நிறுவனங்கள் மூன்றாவது நிறுவனத்திற்கு சொந்தமானது. இதற்கான நடைமுறைகள் அனைத்தும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்ற பிறகு, 2015 இல் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயல்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் SEBI, பங்குச் சந்தை மற்றும் கம்பனிகள் விவகாரத் துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டன.
ALSO READ | காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!
மேலே குறிப்பிட்டுள்ள Vidya, Regal மற்றும் Napean ஆகிய மூன்று நிறுவனங்களையும் ஹாஷிம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டிரேடிங் கம்பெனியுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் கீழ் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து, அஜிம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.