ஜியோவின் காலக்கெடு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

Last Updated : Apr 1, 2017, 09:50 AM IST
ஜியோவின் காலக்கெடு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு title=

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை மார்ச் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதற்குப் பிறகு, ஜியோ கட்டண சேவை தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். இந்நிலையில், ஜியோவில் ரூ.99 செலுத்தி பிரைம் உறுப்பினர் அவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சம்மர் ஆஃபராக  ஏப்ரல் 15-க்குள் ரூ.303 செலுத்தினால் மேலும் 3 மாதங்களுக்கு இலவச சேவை நீட்டிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Trending News