ரூ.10 நாணய உற்பத்தி தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு!

ரூ.10 நாணயங்கள் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!

Last Updated : Feb 6, 2018, 09:25 PM IST
ரூ.10 நாணய உற்பத்தி தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு! title=

ரூ.10 நாணயங்கள் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!

லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்து மூலமாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து பதிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் நாணயங்கள் உற்பத்தியை நிறுத்துவது போன்ற என்னம் அரசிற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாணயங்களுக்கு தற்போது தட்டுப்பாடு இல்லாததாலும், போதுமான பங்குகள் கிடைப்பதாலும் தற்காலிகமாக ரூ.10 நாணய உற்பத்தியினை நிறுத்தி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு போதுமான நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோக மக்களுக்கு தேவையான நாணையங்களை வழங்க வங்கிகளும் RBI-யும் நாணய மேளாக்களை நடத்தி மக்கள் தேவையினை பூர்த்தி செய்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாணய தேவே ஏற்படும் போது மீண்டும் நாணய உற்பத்தி துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்!

Trending News