இந்தியை வளர்க்க ரூ.219 கோடி செலவு -உள்துறை அமைச்சகம்!

அலுவல் மொழியான இந்தியை வளர்க்க ரூ.219 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!

Last Updated : Jul 16, 2019, 03:19 PM IST
இந்தியை வளர்க்க ரூ.219 கோடி செலவு -உள்துறை அமைச்சகம்! title=

அலுவல் மொழியான இந்தியை வளர்க்க ரூ.219 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!

அலுவல் மொழியான இந்தி மொழியை வளர்க்க கடந்த 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.69.33 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அலுவல் மொழியான இந்தியை வளர்ப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகைகள் எவ்வளவு?, அதற்காக என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன? போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்கையில்., கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து அதாவது நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை கொடுத்துள்ளனர். அதில், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 219 கோடி ரூபாய் தொகையை இந்தி மொழியை வளர்க்கும்  பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு மட்டும் 69.19 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த 4 ஆண்டுகளை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது. 

அதாவது 2014-ஆம் ஆண்டு மட்டும் இந்தியை வளர்க்க செலவிடப்பட்ட தொகை ரூ.48.30 கோடி. அதேபோல, 2015-ஆம் ஆண்டு ரூ.49.60 கோடி, 2016-ஆம் ஆண்டில் ரூ.56.64 கோடி என அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தி மொழியை வளர்க்க செலவிடப்படும் தொகை அதிகரித்த வண்ணமாக காணப்படுகிறது. 

அதேபோல், இந்தி மொழியை வளர்க்க பல்வேறு திட்டங்களும் நடைமுறையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய இந்தி சமிதி, கமிட்டி ஆப் பார்லிமென்ட் அண்ட் அபிஷியல் லாங்குவேஜ் போன்ற பல்வேறு திட்டங்களும் நடைமுறையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல வருடங்களாக இந்த திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News