உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் பாலியல் தொழிலாளிகளுக்கான சுகாதார காப்பீடும்

Health insurance for sex workers: விபச்சாரத்தை ஒரு "தொழில்" என்று அங்கீகரித்து உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2022, 06:41 AM IST
  • பாலியல் தொழிலாளிகள் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • பாலியல் தொழிலாளிகளுக்கு சுகாதார காப்பீடு
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பை காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் பாலியல் தொழிலாளிகளுக்கான சுகாதார காப்பீடும் title=

புதுடெல்லி: இந்தியாவில், மிகக் குறைவான காப்பீட்டாளர்கள் மட்டுமே பாலியல் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு வசதியை வழங்குகிறார்கள், அதுவும் இந்தத் தொழிலுடன் தொடர்புடைய அதிக ஆபத்துகளின் காரணமாக மிகச் சிறிய காப்பீட்டுத் தொகையே பாலியல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவின் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விபச்சாரத்தை ஒரு "தொழில்" என்று அங்கீகரித்து ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. பாலியல் தொழிலாளிகள், இந்திய சட்டத்தின் கீழ் கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வலியுறுத்துகிரது.

விபச்சார விடுதிகளில் நடத்தப்படும் சோதனைகளில் பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்படவோ, தண்டிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ அல்லது பாதிக்கப்படவோ கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஏனெனில் தன்னார்வ பாலியல் வேலை சட்டவிரோதமானது அல்ல; இருப்பினும், விபச்சார விடுதிகளை நடத்துவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் விளக்கம் தெரிவித்துள்ளது.

இப்போது, ​​விபச்சாரத்தை ஒரு "தொழில்" என்று அங்கீகரிப்பதால், மற்ற எந்தத் தொழிலையும் போலவே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், காப்பீட்டு வசதியை பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள். பொதுவாக, ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள தனிநபர் மூன்று வகையான காப்பீடுகளை செய்யலாம். அவை, ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு மற்றும் பகுதி/மொத்த நிரந்தர ஊனமுற்றோர் பாதுகாப்பு என்பவையாகும்.

மேலும் படிக்க: அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்

இந்தியாவில், மிகக் குறைவான காப்பீட்டாளர்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறார்கள், அதுவும் இந்தத் தொழிலுடன் தொடர்புடைய அதிக ஆபத்து காரணமாக மிகச் சிறிய காப்பீட்டுத் தொகையே வழங்கப்படுகிறது. பார்க்கப்போனால், பாலியல் தொழிலாளர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கும் நிறுவனம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.

சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் அனைவருக்கும் மனித உரிமை மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தின் 25 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகுதி/மொத்த நிரந்தர இயலாமை காப்பீடு என்பது அனைத்து தொழில் வல்லுனருகளுக்கும் பொருந்தாது. பகுதியளவு இயலாமை என்பதன் கீழ், ஒருவர் காயமடைந்தால், அவர் வேலை செய்ய முடியும் என்றாலும், காயத்திற்கு முன் இருந்த தொழில் திறமையுடன் செயல்பட முடியாது என்பதால், அவர்களின் வருமானம் பாதிக்கப்படும்.

மறுபுறம், நிரந்தர இயலாமை (PD) என்பது ஒருவரின் வேலை காயம் அல்லது நோயால் ஏற்படும் நீடித்த இயலாமையாகும், இது ஒருவரின் வாழ்க்கையை சம்பாதிக்கும் திறனை பாதிக்கிறது. காப்பீட்டுக் கொள்கைகள் ஒரு தனிநபரின் பகுதி மற்றும் மொத்த நிரந்தர குறைபாடுகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குகின்றன.

மேலும் படிக்க | கல்யாணத்தை நிறுத்திட்டீங்களா? மாப்பிள்ளை வீட்டில் தகராறு செய்த பெண்

விசித்திரமாகத் தோன்றினாலும் உண்மையாகத் தோன்றினாலும், பாலியல் தொழிலாளிகளின் விஷயத்தில், அவர்களின் உடல் உறுப்புகள், அவர்களின் வருமானத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. காயம், பாலுறவு நோய்கள் போன்றவற்றால் பாலின உறுப்புகள் சேதமடைந்தால் அது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இதனால், உடல் உறுப்புகளின் காப்பீடு இன்றியமையாததாகிறது. வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடும் ஒரு நபர், பகுதி/மொத்த நிரந்தர இயலாமையின் காரணமாக வருமான இழப்புக்கு காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றால், பாலியல் தொழிலாளிகள் தங்கள் உடல் உறுப்புகளை காப்பீடு செய்வதற்கு ஏன் இதே போன்ற காப்பீட்டுத் தொகை இருக்க முடியாது?

பிரபலங்களும் தங்கள் உடல் உறுப்புகளுக்கு காப்பீடு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருவதைப் பார்க்கலாம். கால்கள், புன்னகை, மார்பகங்கள் என பிரபலங்களின் வித்தியாசமான காப்பீடுகள் பிரபலமானவை. ரிஹானா தனது கால்களுக்கு $1 மில்லியனுக்கு காப்பீடு செய்தார்; ஹெய்டி க்ளம் தனது கால்களுக்கு $2 மில்லியனுக்கு காப்பீடு செய்தார் என்றால், ஜேமி லீ கர்டிஸ் தனது கால்களுக்கு $2.8 மில்லியன் காப்பீடு செய்தார்.

மேலும் படிக்க: Delhi MLAs: மாயமான டெல்லி எம்எல்ஏக்கள்

டினா டர்னர் தனது கால்களுக்கு $3.2 மில்லியன் காப்பீடு செய்தார்; மைக்கேல் பிளாட்லி தனது கால்களுக்கு $40 மில்லியன் காப்பீடு செய்தார்; டேவிட் பெக்காம் தனது கால்களுக்கு $70 மில்லியன் காப்பீடு செய்தார்; கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்களை 144 மில்லியன் டாலருக்கும், மரியா கேரி தனது கால்களை 1 பில்லியன் டாலருக்கும் காப்பீடு செய்துள்ளார்.

பாலியல் தொழிலாளர்களின் சமூகப் புறக்கணிப்பு காரணமாக, பாலினத் தொழிலாளர்களின் உடல் உறுப்புகளுக்குக் காப்பீடு வழங்குவது நடைமுறைக்கு வருவது என்பது சாத்தியமானதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் அத்தகைய காப்பீட்டுத் தொகை வருவதாக இருந்தாலும், அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

எவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்கலாம். அவர்களுக்கான சுகாதார வசதிகளை மலிவானதாகவும் அணுகக்கூடியதாக மாற்ற, மானிய விலையில் சுகாதார காப்பீட்டிற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்பது பாலியல் தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் ஜீ நியூஸ் மற்றும் ZMCL கருத்துகள் அல்ல. அருணவ டேய் என்ற சமூக ஆர்வலரின் சொந்த கருத்துகள்.)

மேலும் படிக்க | வாட்ஸ்அப் சிக்னல் மெசேஜிங் செயலிகள் ஒழுங்குபடுத்தப்படும்: ட்ராய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News