காங்., அணியில் ஆம் ஆத்மி; மூத்த தலைவர் சரத்பவார் முயற்சி?

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Updated: Mar 19, 2019, 07:07 PM IST
காங்., அணியில் ஆம் ஆத்மி; மூத்த தலைவர் சரத்பவார் முயற்சி?

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிசி சாக்கோ, நிர்வாகிகள் மத்தியில் போன் மூலம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அதன் பின்னர், "புதுடெல்லியில் பா.ஜ.,-வை தோற்கடிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க வேண்டும். இதனை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர்'' என தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித், டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் எனக்கூறி காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி தொடர்பாக இரு கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் பா.ஜ.,விற்கு எதிராக வலுவான இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.