கைவிட்ட தொகுதியை மீண்டும் பிடித்தார் சத்ருகன் சின்ஹா!

காங்கிரசில் இணைந்த சத்ருகன் சின்ஹா, பாராளுமன்ற தேர்தலில் பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது!

Updated: Apr 6, 2019, 05:09 PM IST
கைவிட்ட தொகுதியை மீண்டும் பிடித்தார் சத்ருகன் சின்ஹா!

காங்கிரசில் இணைந்த சத்ருகன் சின்ஹா, பாராளுமன்ற தேர்தலில் பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது!

முன்னதாக பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது. இதனையடுத்து பாட்னா சாஹப் தொகுதியில் பாஜக எம்.பி-யாக இருந்த சத்ருகன் சின்ஹா பாஜக மீது கடும் அதிருப்தி தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து சின்ஹா, இதையடுத்து கடந்த மாதம் பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த வாரம் டெல்லி சென்ற சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்தார்.

இதற்கிடையில் இன்று காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று வெளியான பட்டியலில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளது. இவர் பாஜக-வின் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்துப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.