UPSC தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண்ணுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து!!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்தது. கடினமான இத்தேர்வை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டமே தேர்ச்சி பெறுகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாடு முழுவதும் நடந்த இத்தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வில், கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் முதல் இடம் பிடித்திருக்கிறார். இவர், ஐஐடி மும்பையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அக்ஷித் ஜெயின் மற்றும் ஜுனைத் அகமத் ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்த பலகுடியினரை சேர்ந்த சுரேஷ்- கமலம் என்பவர்களின் வயது 26 வயதுடைய மகள் ஸ்ரீதன்யா. கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்த போதும் ஸ்ரீதன்யாவுக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று தீராத தாகம் இருந்தது. கல்வியை நன்கு கற்று வந்தார். மகளின் ஆர்வத்துக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். இதையடுத்து, ஸ்ரீதன்யா டெல்லி சென்று UPSC தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலி வேலை செய்து வந்தார் ஸ்ரீதன்யா, சமீபத்தில் மின்சாரம் தாக்கி தன்யாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது. இந்தநிலையில் UPSC தேர்வு முடிவு வெளியானது. இதில் ஸ்ரீதன்யா, 410 ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் கலெக்டர் ஆவது இதுவே முதல் முறை. இதனால் ஆதிவாசி மக்கள் ஸ்ரீதன்யா வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
Ms Sreedhanya Suresh from Wayanad, is the first tribal girl from Kerala to be selected for the civil service.
Sreedhanya’s hard work & dedication have helped make her dream come true.
I congratulate Sreedhanya and her family and wish her great successs in her chosen career.
— Rahul Gandhi (@RahulGandhi) April 6, 2019
இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அவரது அர்ப்பணிப்பும் கனவை நினைவாக்க உதவியுள்ளது. தான் தேர்வு செய்யும் பணியில் மிகப்பெரும் வெற்றியை பெற ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.