கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து உடுப்பியில் 6 கல்லூரி மாணவிகள் கடந்த ஜனவரியில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வையும் புறக்கணித்தனர்.
மேலும், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்காததால் முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வை புறக்கணித்தனர். அவர்கள் தற்போது மறுதேர்வுக்கு அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் படிக்க | கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி
இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், முஸ்லிம் மாணவிகள் கர்நாடக அரசின் உத்தரவையும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்கவில்லை. எனவே அவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார். இதனால் முஸ்லிம் மாணவிகள் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR