POCSO வழக்கு- சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குவிந்துள்ள நிலையில், POCSO வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

Last Updated : Jul 25, 2019, 01:21 PM IST
POCSO வழக்கு- சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு! title=

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குவிந்துள்ள நிலையில், POCSO வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக POCSO சட்டத்தின் கீழ் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்குவதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இதுபோன்ற நீதிமன்றங்களை உருவாக்க, நீதிபதிகளை நியமித்தல், உதவி ஊழியர்கள் மற்றும் சிறப்பு வழக்குரைஞர்களை நியமிக்க நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அமிகஸ் கியூரி வி கிரி மற்றும் உச்சநீதிமன்றத்தின் பதிவேட்டின் அறிக்கையின் பேரில் இந்த அதிரடி உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் பலாத்கார வழக்குகளை தீர்ப்பதற்காக காத்திருக்கும் நிலையில் தற்போது 670 POCSO நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டிய பின்னர் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தற்போது ஒரு நீதிபதி 224 வழக்குகளை சராசரியாக தினசரி அடிப்படையில் கையாளுகிறார், POCSO-ன் கீழ் வழக்குகள் ஒரு வருடத்திற்குள் தீர்க்கப்பட வேண்டுமானால், நாட்டிற்கு 1:60 என்ற விகிதம் தேவைப்படுகிறது எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. அதாவது இந்த எண்ணிக்கை, தற்போது இருக்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையினை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

குழந்தைகள் மீதான மோசமான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட POCSO சட்டத்தில் திருத்தங்களை கோரும் மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றிய ஒரு நாள் கழித்து இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த மசோதா சிறார்களுக்கு எதிரான பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளையும் கோருகிறது. இந்த மசோதா தற்போது மக்களவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Trending News