பரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!!
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகர விளக்கு வழிபாடு வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஐந்து கட்டங்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் 10 ஆயிரத்து 17 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கேரள மாநில காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி வழங்கப்படதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'அனைத்து வயது பெண்களையும் அய்யப்பன் கோவிலில் அனுமதிக்கலாம்' என தீர்ப்பளித்தது.
உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சபரிமலை வழக்கின் பின்னணி:
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது.
உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்த பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பில் மறு ஆய்வு கோரும் மனுக்களின் மீதும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அறிவிக்கிறது.