திருப்பதி தேவஸ்தான கணனிகளிலும் ரான்சம்வேர் அட்டாக்!

Last Updated : May 17, 2017, 09:51 AM IST
திருப்பதி தேவஸ்தான கணனிகளிலும் ரான்சம்வேர் அட்டாக்! title=

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை என்.எஸ்.ஏ., உருவாக்கிய இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது. 

இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. 

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநில திருப்பதி தேவஸ்தான அலுவலக கணினிகள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 20 கணினிகள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. 
கணினியிலிருந்த நிர்வாக ரீதியிலான தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கான சாமி தர்சன சேவையில் எந்தஒரு பாதிப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
வழக்கமான அலுவலக பணிக்காக பயன்படுத்தப்படும் விண்டோஸ் 7 மற்றும் எக்ஸ்பி ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இயங்கும் 20 ஒர்க்ஸ்டேஷன்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளன. அவைகளின் நெட்வோர்க் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நிர்வாக கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேவஸ்தானத்தின் இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

Trending News