கூடிய விரைவில் புதிய ரூ.100 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது!
கிடைக்கெப்பெற்ற தகவல்களின் படி புதிய ரூ.100 நோட்டுக்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வங்கி ஒன்றில் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ரூ.100 நோட்டுகளின் புதிய வடிவமைப்பு பொதுமக்கள் பார்வைக்கு வரும் ஆகஸ்ட் (அ) செப்டம்பர் மாதத்தில் காண்பிக்கப்படும் எனவும் தெரிகிறது.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாகவுள்ள இந்த ரூ.100 நோட்டு ஆனது முந்தைய ரூ.100 நோட்டுகளை விட அளவில் சிறியதாக இருக்கும் எனவும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.10 நோட்டினை விட சற்றே பெரியதாக இருக்கும் எனவும் தெரிகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பண மதிப்பு இழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வடிவத்திலும் அமைப்பிலும் பல மாற்றங்களுடன் வெளியான இந்த புதிய நோட்டுகள் பல பாதுகாப்பு கருவிகளையும் கொண்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த புதிய நோட்டுகளுக்கு பொதுமக்களிடைய முதலில் எதிர்ப்புகள் எழுந்த போதிலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதனையடுத்து இதேப்போல் புதிய சிறப்பம்சங்களுடன் ரூ.200, ரூ.10 மற்றும் ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தற்போது புதிய ரூ.100 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.