புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் எம்எம்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு

Puducheery Congress and DMK MLAs wear black clothes: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவை வளாகத்திற்கு சென்றனர்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2022, 10:49 AM IST
  • புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
  • துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு
  • சட்டமன்றத்தில் இருந்து காங்கிரஸ் திமுக வெளிநடப்பு
புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் எம்எம்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு title=

புதுச்சேரி: 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கியது. புதுச்சேரி பட்ஜெட் ஆளுநர் உரையை கண்டித்து திமுக, காங்., எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வருகை தந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை, மின்துறை தனியார் மயம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து திமுக - காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே, புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லிக்கு பயணம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி, நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது பிரதமருடன் பேசிய புதுவை முதலமைச்சர், மத்திய அரசு கூடுதல் நிதியுதவி தராவிட்டால் பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாது என்று தெரிவித்து மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு மே மாதம் முதல்வராக பொறுப்பேற்றாலும், இதுவரை புதுவை முதல்வர் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பாஜகவுக்கு புதுவை முதலமைச்சர் மீது அதிருப்தி இருப்பதாக ஊகிக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டுக்கான ரூ 11,000 கோடி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. ஆகஸ்ட் பத்தாம் தேதியான இன்று, ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு முதல்நாள் திடீரென்று டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லிக்கு சென்ற புதுவை முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து மனு கொடுத்தார் என்று ஏஎனை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | தென்மேற்கு பருவமழை புதுச்சேரியில் 94 சதவீதம் அதிகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News