திரிபுராவில் உல்டா ரத யாத்திரையின் போது என்ன நடந்தது? 7 பேர் பலி, 15 பேர் காயம்

Tripura Ulta Rath Yatra Mishap: திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்தில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 29, 2023, 07:31 AM IST
  • திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்து
  • மின்சாரம் தாக்கி 7 பேர் பலி, 15 பேருக்கு காயம்
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவு
திரிபுராவில் உல்டா ரத யாத்திரையின் போது என்ன நடந்தது? 7 பேர் பலி, 15 பேர் காயம் title=

அகர்தலா: திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜகந்நாதர் தேர் உற்சவத்தின்போது ஏற்பட்ட விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்த தேர், உயர் அழுத்த கம்பியில் சிக்கியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இஸ்கான் ஏற்பாடு செய்த 'உல்டா ரத் யாத்ரா' அல்லது ரதம் திரும்பும் திருவிழாவின் போது குமார்காட் பகுதியில் மாலை 4.30 மணியளவில் இந்த சோக விபத்து நடைபெற்றது. பூரி ரத யாத்திரை திருவிழாவின் போது, கடவுள் கிருஷ்ணருடன் அவரது சகோதரர் பாலபத்ரா, ஜெகந்நாதரின் தங்கை தேவி சுபத்ரா என மூவரும் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பும் சடங்கு நடைபெறுகிறது.

திரிபுராவில் உல்டா ரத யாத்திரையின் போது என்ன நடந்தது?

இரும்பினால் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து  இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர்.தெருவில் சென்றுக் கொண்டிருந்த ரதத்தின் மீது, 133 KV அழுத்தம் கொண்ட மேல்நிலை கேபிள் உரசியது. அப்போது ரதத்தின் சில பகுதிகள் தீப்பிடித்தன்.

மேலும் படிக்க | Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை

எரிந்த ரதத்தில் இருந்த மக்கள் உடனடியாக உடலில் தீப்பிடித்து சாலையில் விழுந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் 15 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ரதம் தீப்பிடித்ததில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெனரல் சட்டம் மற்றும் ஒழுங்கு ஜோதிஷ்மன் தாஸ் சவுத்ரி PTI இடம் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மாவட்டத்தில் உள்ள கைலாஷாஹர் மற்றும் குமார்காட் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அகர்தலாவில் உள்ள ஜிபி பண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

ரத யாத்திரையில் நடைபெற்ற இந்த விபத்து வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். "குமார்காட்டில் உல்டா ரத யாத்திரையின் போது நடந்த அசம்பாவிதம் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று பிரதமர் அலுவலகம் (PMO) அவரை மேற்கோள் காட்டி ட்வீட் செய்தது.

மேலும் படிக்க | பக்ரீத் பண்டிகை விற்பனை! ஆட்டின் விலை ரூ 8 லட்சம்! 200 கிலோ எடை கொண்ட ஸ்பெஷல் ஆடு

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (பிஎம்என்ஆர்எஃப்) இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, குமார்காட்டுக்கு இரயிலில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார். மாநில அமைச்சர் டிங்கு ராய் உடன், சாஹா குமார்காட் மருத்துவமனைக்குச் சென்று மக்களின் நலம் குறித்து விசாரித்தார், விபத்தில் சிக்கிய அனைவருக்கும், அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார்.

"குமார்காட்டில் நடந்த ஒரு சோகமான விபத்தில், 'உல்டா ரத்' இழுக்கும்போது மின்சாரம் தாக்கியதில் பல பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் நான் மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய, இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசு அவர்களுக்கு துணை நிற்கிறது" என்று சாஹா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பொது சிவில் சட்டம்... வலியுறுத்தும் பிரதமர் மோடி... எதிர்க்கும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்!

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் போது முதல்வர் சாஹா, இறந்தவரின் உறவினர்களுக்கு உடனடியாக ரூ. 4 லட்சம் இழப்பீடு அறிவித்தார், அதே நேரத்தில் 60% க்கும் அதிகமான தீக்காயங்கள் உள்ள நபர்களுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும் என்றும், 40 முதல் 60 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.74,000 வழங்கப்படும் என திரிபுரா முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு திரிபுரா மாநில மின்சார கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். விபத்துக்கு காரணமான தவறுகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திப்ரா மோதாவின் எதிர்க்கட்சித் தலைவர் அனிமேஷ் டெபர்மா கோரினார்.

"உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனக்குறைவால் இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிகிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளும் இரங்கல் தெரிவித்தன. மாநில பாஜக வியாழக்கிழமை தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது, அதன் தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி அப்பகுதிக்கு வருகை தருவார் என்று கூறினார்.

மேலும் படிக்க | பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News