ஆனந்தத்தில் எடுத்த செல்ஃபி-ஆல் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

சுற்றுலாவிற்கு சென்ற இருவர் கோவா கடலில் இறங்கி செல்ஃபி எடுத்தபோது அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!! 

Last Updated : Jun 18, 2018, 02:59 PM IST
ஆனந்தத்தில் எடுத்த செல்ஃபி-ஆல் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

சுற்றுலாவிற்கு சென்ற இருவர் கோவா கடலில் இறங்கி செல்ஃபி எடுத்தபோது அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!! 

கோடை காலம் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் சுற்றுலாவிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் கோவா செல்வார்கள். கோவாவில், எப்போதும் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். 

இந்நிலையில், கோவாக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இவர்கள் செல்ஃபி எடுப்பதற்காகக் கடலில் இறங்கிய போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவலர் ஜிவ்பா டால்வி (Jivba Dalvi) கூறுகையில்...! 

தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய தினேஷ் குமார் ரங்கநாதன் என்பவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சுற்றுலாவிற்க்காக கோவா வந்துள்ளார். இவர்கள்,  கோவாவில் உள்ள, பாகா கடற்கரையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். கடலில் இறங்கிய தினேஷ் குமார் ஆனதத்தில் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது, கடலில் உருவாகிய ராட்சச அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. அதில், தினேஷ்குமாரின் நண்பர்கள் இருவரும் கரையை வந்தடைந்தனர். அலையில் சிக்கி தினேஷ்குமார் உயிரிழந்தார். இவரது உடலை கரை ஒதுங்கிய பின்னரே மீட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, கோவா வடக்கில் உள்ள கடற்கரையான சின்கர்னிம் பீச்சுக்கு சுற்றுலா வந்த தமிழகத்தை சேர்ந்த 33 வயதுடைய சசிகுமார் வாசன் என்பவரும் தினேஷ்-ஐ போல் செல்ஃபி எடுப்பதற்காக ஆபத்தை உணராமல் கடலில் இறங்கியுள்ளார். அப்போது அவரும் கடல் அலையால் இழுத்து செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதையடுத்து, அலையில் சிக்கி மரணமடைந்த தினேஷ் குமார் மற்றும் சசிகுமார் வாசன் ஆகியோரின் உடல்கள் உடல்கூறு ஆய்வுக்காக கோவா மருத்துவக்கலூரி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளதாகவும் காவலர் ஜிவ்பா டால்வி தெரிவித்துள்ளார். 

கடந்த 72 மணிநேரத்தில் இந்த சம்பவம் ஐந்தாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது! 

 

More Stories

Trending News