ஆன்டிராய்டு போன்களுக்கான எம்ஆதார் ஆப் அறிமுகம்

Last Updated : Jul 20, 2017, 11:32 AM IST
ஆன்டிராய்டு போன்களுக்கான எம்ஆதார் ஆப் அறிமுகம் title=

மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஆதார் அடையாள அட்டையை எடுத்துச் செல்லும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

எம்ஆதார் எனும் புதிய செயலியை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையை ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்க முடியும். இதனால் ஆதார் அட்டையை கையில் வைத்திருக்க அவசியம் இல்லை.

> கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் டவுன்லோடு செய்ய முடியும். 

> இந்த செயலியில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதலில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற ஆதார் புரோபைல்களை டவுன்லோடு செய்யலாம்.

> இந்த செயலியில் 'பயோமெட்ரிக் லாக்கிங்' மற்றும் 'பயோமெட்ரிக் அன்லாக்கிங்' ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.  

> எம்ஆதார் செயலி TOTP அல்லது டைம்-பேஸ்டு-ஒன்-டைம்-பாஸ்வேர்டினை பயன்படுத்துகிறது, இது ஆதார் சார்ந்த ஆத்தென்டிகேஷனை எஸ்எம்எஸ் சார்ந்து வெரிபை செய்யும். வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் புரோபைலில் மாற்றங்களை செய்து அவற்றை சேமிக்க முடியும்.

> இந்த செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஆதாருடன் வழங்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்க வேண்டும். 

> செயலியை இயக்க ஏற்கனவே பதிவு செய்த ஒன்-டைம் பாஸ்வேர்டு கொண்டு இயக்க முடியும். 

Trending News