பனஸ்கந்தா: குஜராத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நடாபெட்டில் கட்டப்பட்டுள்ள பார்டர் வியூ பாயிண்டை (Border View Point) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செயல்திறன் மிக்க BSF படை
வியூ பாயிண்ட் திறந்து வைக்கும் விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'நாட்டின் முன் ஏதேனும் பிரச்சனை வரும்போதெல்லாம், வீரத்தை காட்டுவதில் BSF ஒருபோதும் பின்வாங்குவதில்லை. BSF எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது என்றார்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியும் பிற நாடுகள் மீது அதன் தாக்கமும்
மேலும் கூறுகையில், ஒரு மகாவீர் சக்ரா, 4 கீர்த்தி சக்கரா விருதுகள், 13 வீர் சக்ரா விருதுகள், 13 சௌர்ய சக்ரா விருதுகள் மற்றும் எண்ணற்ற தியாகங்களின் அழியாத சரித்திரத்துடன், BSF இலக்கை நோக்கி முன்னேறியுள்ளது. நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. நடாபெட் View Point மீண்டும் நம் ஹீரோக்களின் வீரக்கதைகளை நம் முன் கொண்டுவரும். இங்கு வருவதால் குழந்தைகளின் மனதில் தேசபக்தியும் ஏற்படுகிறது. இது சுற்றுலாவையும் மேம்படுத்தும் என்றார்
வியூ பாயிண்டில் நீங்கள் காண்பது என்ன
குஜராத்தில் இது முதல் எல்லைப் புள்ளியாக இது இருக்கும், இங்கு பார்வையாளர்கள் கேலரி, புகைப்படத் தொகுப்பு மற்றும் ஆயுத-டாங்கிகள் ஆகியவை பஞ்சாப் வாகாவில் உள்ள பாக் எல்லையைப் போன்று காட்சிப்படுத்தப்படும். எனினும் இங்கு பிஎஸ்எஃப் வீரர்கள் மட்டுமே நடாபெட்டில் பயிற்சி நடத்த முடியும். வாகா பார்டர் போன்ற ரீட்ரீட் நிகழ்வு இருக்காது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 20-25 கிலோமீட்டர் தொலைவில் நாடபெட் எல்லை பாயிண்ட் அமைந்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவில் நடாபெட் அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள் வேலியை தொட்டு உணர முடியும். இது தவிர, அவர் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு பறவைகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தையும் அனுபவிக்க முடியும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். இந்த வியூ பாயின்ட், தங்கள் கடமைக்காக உயிரை தியாகம் செய்த அந்த துணிச்சலானவர்களின் கதை.
மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR